கனடாவில் விமானங்களுக்கு தற்காலிக தடை! பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு
பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா தொற்றின் பரவலை தொடர்ந்து உலக நாடுகள் விமானங்களுக்கான பயணத்தடை விதித்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு கனடா தற்காலிக தடை விதித்துள்ளது.
இன்று அதிகாலை 12.01 மணி தொடக்கம், 72 மணித்தியாலங்களுக்கு இந்த தடை நீடிக்கும் என்று பிரதமர் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
இந்த தடை சரக்கு விமானங்கள் மற்றும், பயணிகளை இறக்காமல் இடைநிறுத்தி செல்லும் விமானங்களுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் இந்த தடையை விதித்துள்ளது.
No comments