பாரிஸில் இரத்தச்சிவப்பில் ஜனாதிபதியின் சிலை வடிமைப்பு!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் இரத்தச்சிவப்பிலான சிலை நேற்று திங்கட்கிழமை பாரிஸ் 10ஆம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வீடற்றவர்கள் பயன்படுத்தும் கூடாரம் ஒன்றின் அருகே ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அமர்ந்திருப்பது போல் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சிலை இரத்த சிவப்பில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
இதனை டுலூஸ் நகரைச் சேர்ந்த குறித்த ஜேம்ஸ் கொலொமினா எனும் கலைஞர் உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வீடற்றவர்களை அரசாங்கம் கைவிடுகின்றது.
இதனை கண்டித்து இந்த சிலையை நான் நிறுவியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் நாடு முழுவதும், பல வீதிகளில் இதுபோன்ற சிவப்பு நிற சிலைகளை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments