லண்டன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தாயும், மகளும்
லண்டனிலுள்ள Hounslowவில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில், Shiwangi Bagoan (25) என்ற இளம்பெண்ணும் அவரது மகளான Ziana Bagoan (2) என்ற குழந்தையும், உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
Shiwangi எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விடயமோ, குழந்தையின் தந்தை யார், அவர் எங்கிருக்கிறார் என்கிற விடயமோ இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், Shiwangi மற்றும் அவரது மகளை உயிரிழந்த நிலையில் கண்டுபிடித்த குழந்தையின் பாட்டியான Jassumati, அவர்கள் இருவரது கைகளிலும் குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தும் ஊசி குத்தப்பட்டிருந்தவண்ணமாகவே அவர்கள் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார்.
தான் பணிபுரியும் மருத்துவமனையிலிருந்து ஏதோ ஒரு மருந்தை எடுத்துவந்த Shiwangi, அதை தன் மகளுக்கும் தனக்கும் ஊசி மூலம் ஏற்றிகொண்டதால் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
என்றாலும் இன்னமும் முழுமையான உடற்கூறு ஆய்வுகள் வராததால், Shiwangi மற்றும் Zianaவின் மரணம் குறித்த முழு விவரமும் தெரியவரவில்லை.
பொலிசார் இந்த மரணங்கள் தொடர்பாக யாரையும் சந்தேகிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
No comments