🔴 கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு! - இன்றைய நிலவரம்!!
கடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தொற்று, இன்று செவ்வாய்க்கிழமை திடீரென அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 13,713 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை நான்காயிரத்துக்கும் குறைவான தொற்றுக்களே பதிவாகியிருந்தது.
அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 377 பேர் சாவடைந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் 25,914 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 3,088 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
*******
நாள் ஒன்றில் ஐந்தாயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள் பதிவானால் மாத்திரமே டிசம்பர் 15 ஆம் திகதி உள்ளிருப்பு தளர்த்தப்படும் என முன்னதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments