Header Ads

🔴 ஜனாதிபதி மக்ரோனுக்கு அவசர கடிதம்! - முழுமையான விபரம்!

 



பரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி பணியில் இருந்து விலகவேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

 
தலைநகரைச் சேர்ந்த 72 அரசியல் தலைவர்கள் இணைந்து கையெழுத்திட்டு இந்த கோரிக்கை கடிதத்தை எழுதியுள்ளனர்.  இன்று செவ்வாய்க்கிழமை இந்த கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்படி அனுப்பப்பட்டுள்ளது. 



 
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ; ”ஜனாதிபதிக்கு, பரிஸ் காவல்துறை தலைமை அதிகாரியான Didier Lallement பணியில் இருந்து விலகவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். காவல்துறையினரின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு எதிராக அவர் செயலாற்றவில்லை. பரிஸ் மக்களை மேலும் ஆபத்துக்குள் கொண்டுவந்துள்ளார்!” என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அண்மையில் Place de la République இல் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமை அகற்றும் போது காவல்துறையினர் மிக மோசமாக நடந்துகொண்டதையும்,  Michel Zecler எனும் இசையமைப்பாளர் மீது இனவாத தாக்குதல் நடத்தப்பட்டதையும் அவர்கள் குறிப்பிட்டு இக்கடிதத்தை எழுதியுள்ளனர்

No comments

Powered by Blogger.