🔴 டிசம்பர் 15 உள்ளிருப்பு நீக்கப்படுமா? - இன்று முக்கிய சந்திப்பு!!
டிசம்பர் 15 ஆம் திகதி உள்ளிருப்பு சட்டம் நீக்கப்படுவது குறித்த முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறுகிறது.
இன்று புதன்கிழமை காலை சிறப்பு சுகதார பிரிவினர் சந்தித்து உரையாட உள்ளனர். ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது. இதில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரதமர் Jean Castex மற்றும் சில முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
வரும் டிசம்பர் 15 ஆம் திகதியுடன் உள்ளிருப்பு சட்டம் தளர்த்தப்பட்டு, அன்றில் இருந்து இரவு நேர உள்ளிருப்பு நடைமுறையில் இருக்கும் என முன்னதாக ஜனாதிபதி மக்ரோன் அறிவித்திருந்தார். அதேவேளை இந்த உள்ளிருப்பு தளர்வு, நாள் ஒன்றில் 5000 இற்கும் குறைவான கொரோனா தொற்றுக்கள் பதிவானால் மாத்திரமே நடைமுறைக்கு வரும் எனவும் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
ஆனால் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகின்றது. அதைத் தொடர்ந்து, உள்ளிருப்பு தளர்த்தப்படுமா இல்லையா என்பது தொடர்பான குழப்பங்கள் நீடித்து வந்தது.
இந்த குழப்பத்துக்கு முடிவு காணவே இன்று இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது.
No comments