லண்டனில் விடுதி ஒன்றில் வீசிய துர்நாற்றம்…. அழுகிய நிலையில் கிடந்த பெண்
லண்டனில் உள்ள Southall என்ற பகுதியில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது.
இவ்விடுதியில் பணம் செலுத்தி மக்கள் இரவு நேரங்களில் தங்குவர்.
இந்நிலையில் இவ்விடுதியில் பெயிண்ட் அடிப்பதற்காக ஒருவர் சென்ற போது அங்குள்ள சூட்கேஸ் ஒன்றை திறந்து பார்த்தபோது அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அதனை திறந்து பார்த்த நபர் அதனுள் ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் விடுதியிலிருந்து அதிகமான துர்நாற்றம் வீசுவதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் பெண்ணின் உடலிலிருந்து தான் நாற்றம் வந்திருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மர்மமான மரணம் குறித்த விபரம் எதுவும் இதுவரை தெரியாததால் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
No comments