நத்தார் - வருட இறுதிக்கு முன்னர் அனைத்து ஆசிரியர்களிற்கும் கொரோனாச் சோதனை - அமைச்சகம்!!
நத்தார் விடுமுறைகளிற்கு முன்னர், அனைத்து ஆசிரியர்களிற்கும், பேராசிரியர்களிற்கும், கல்வித்துறைப் பணியாளர்களிற்கும், பாரிய அளவில் கொரோனாச் சோதனைகள் நடைபெற்று வருவதாகப் பிரான்சின் கல்வியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று ஆரம்பித்த இந்த நடவடிக்கை மிக வேகமாகத் தொடர்ந்து வருகின்றது. வருட இறுதிக்கு முன்னர் அனைவரும் சோதனை செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்காலத் தொற்றுக்களைத் தவிர்ப்பதற்காகவும், மீண்டும் பாடசாலைகள் தொடங்கும் போது, அங்கு தொற்றுக்களைத் தவிர்ப்பதற்காகவும் இந்த நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
No comments