இதுவரை 60,000 பேர் சாவு - கொரோனா நிலவரம்..!
கடந்த 24 மணிநேரத்தில் 15,674 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் பதிவான மொத்த தொற்று எண்ணிக்கை 2,442,960 ஆக அதிகரித்துள்ளது.
24,945 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2,764 பேர் அவசரப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 264 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் பதிவான மொத்த சாவு எண்ணிக்கை 60,000 எனும் புதிய எல்லையை தாண்டி, தற்போது 60,229 ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சில் இவ்வருடத்தின் மார்ச் மாதத்தில் முதல் கொரோனா சாவு பதிவாகியிருந்தது. பின்னர் இரண்டு கட்டமாக பெரும் தொற்று அலை ஏற்பட்டு இந்த சாவு எண்ணிக்கை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாவு என்பதை இறப்பு என்று எழுதியிருக்கலாம்
ReplyDeleteஉங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி இனிவரும் செய்திகளில் மாற்றி எழுதுகின்றோம்
Deleteஆசிரியர் கவிசுகி