சமூகவலைத்தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட பிரெஞ்சு பாடகர்!
பிரெஞ்சு பாடகர் ஒருவரின் சமூக வலைத்தள கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு பாடகர் Booba பயன்படுத்தி வந்த Instagram (இஸ்டகிராம்) கணக்கே இவ்வாறு நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. இவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சமூக விரோத சிந்தனைகளை இன்ஸ்டகிராமில் பதிந்திருந்ததாகவும், பிற பாடகர்கள் பலரை இவர் அவமதித்து பதிவுகள் இட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இந்த இன்ஸ்டகிராம் கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் அவரது இன்ஸ்டகிராம் கணக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இப்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது.
No comments