தொற்று அதிகரிக்கும் - நத்தார் - வருட இறுதிக் கெதண்டாடங்கள் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!!
வருட இறுதி மற்றும் நத்தார்க் கொண்டாட்டங்களின் பின்னர் கொரோனாத் தொற்று மிகவும் அதிகமாகும் என்றும், அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரப் பொது இயக்குநர் ஜெரோம் சாலமொன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளாந்தம் கொரோனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும் 11.000 அளவிலேயே நாளாந்தம் உள்ளது. 15ம் திகதிக்கு முன்னர் 5.000 இற்கும் குறைவாக கொரோனத் தொற்றைக் குறைப்பதென்பது இன்னமும் தொலைவாகவே உள்ளது எனவும், ஜெரோம் சாலமொன் இன்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய அயல் நாடுகளிலும், அமெரிக்காவிலும், மிகவும் அதிகமாகக் கொரோனாத் தொற்றுப் பரவல் உள்ளது.
நாம் கவனமாகவும் அவதானமாகவும், பாதுகாப்பு இடைவெளிகள் மற்றும் முகப் பாதுகாப்பணி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தினைக் கொண்டாட்டங்களின் பின்னர் சந்திக்க நேரிடும் எனவும், சுகாதாரப் பொது இயக்குநர் எச்சரித்துள்ளார்.
No comments