Header Ads

15ம் திகதி உள்ளிருப்பை நீக்குவது சாத்தியமா? குழப்பத்தில் அரசாங்கம்!

 



ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் உள்ளிருப்பை நீக்குவதற்காக அறிவித்த கால எல்லையான, டிசம்பர் 15ம் திகதியில், உள்ளிருப்பை நீக்குவதுசாத்தியமா என்ற கேள்வி அரசாங்கத்தினுள்ளேயே எழுந்துள்ளது.

 
உள்ளிருப்பை நீக்குவற்காக வழங்கப்பட்ட நிபந்தனைகளாக, நாளொன்றிற்கு 5.000 தொற்றிற்கும் குறைவாக கொரோனாத் தொற்றுத் தொகை குறைக்கப்படல் வேண்டும் எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 2.500 நோயாளிகளிற்கும் குறைவாகவே இருத்தல் வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது அறிக்கையில் அறிவித்திருந்தார்.
 
இன்று சுகாதாரப் பொது இயக்குநர் ஜெரோம் சாலமொன், இன்று வெளியிட்ட காணொளியில், 5.000 இற்கும் குறைவாக நாளாந்தத் தொற்றுக்களை குறைப்பது, தற்போதைக்குச் சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளமை, உள்ளிருப்பை நீக்குவது தொடர்பாக, சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளதாகப் பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.