Header Ads

🔴எச்சரிக்கை - பெல்லா - பிரான்சை அச்சுறுத்தும் புயற்காற்றும் பனியும் - இல்-து-பிரான்சிற்கும் எச்சரிக்கை!

 


நாளையிலிருந்து பிரான்சின் பல பகுதிகளில், கடுமையான புயற்காற்றும் பனிப்பொழிவும் தாக்க உள்ளதாகப் பிரான்சின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஐஸ்லாந்தில் இருந்து வீசும் இந்தப் பனிப் புயலான 'பெல்லா' நாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் பிரான்சின் பல பகுதிகளைத் தாக்க உள்ளது.
 
கடுமையான புயற்காற்று பிரான்சின் பெரும் பகுதியைத் தாக்க உள்ளது. மலைப் பகுதிகளிலும், பிரான்சின் கிழக்குப் பகுதிகளிலும் கடுமையான பனிவீழ்ச்சியும் ஏற்பட உள்ளன.
 
 
இல்-து-பிரான்ஸ் உட்பட பிரான்சின் பல பகுதிகள் இன்றிலிருந்து மஞ்சள் எச்சரிக்கைக்குள்ளும் சில பகுதிகள் செஞ்சிவப்பு எச்சரிக்கைக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளன.
 
மணிக்கு 110 கிலோமீற்றர் வேகம் வரை புயற்காற்று வீச உள்ளதால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

No comments

Powered by Blogger.