செவ்ரோன் நகரிற்கு வந்தடைந்த கொரோனாத் தடுப்பூசிகள்!! எப்படி இது போடப்பட உள்ளது?
நாளை ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் முதற்கட்டக் கொரோனாத் தடுப்பு ஊசிகள் குறிப்பிட்ட இரண்டு முதியோர் இல்லங்களில் தெரிவு செய்யப்பட்ட சிலரிற்குப் போடப்பட உள்ளது.
பெல்ஜயியத்தில் இருந்து வந்துள்ள 19.500 முதற்கட்ட தடுப்பூசி அலகுகள், செய்ன்-சன்-துனியில் (Seine-Saint-Denis) உள்ள செவ்ரோன் நகரிலுள்ள Hôpital René-Muret இற்கும் திஜோன் (DIJON) நகரத்திலுள்ள CHU de Dijon இற்கும் அனுப்பப்பட்டுள்ளன.
கார்போனிக் ஐஸ்கட்டிகள் மூலம் இது -70°C வெப்பநிலையில் இவை பேணப்பட்டுள்ளன.

செவ்ரோன் மற்றும் திஜோனில் உள்ள முதியோர் இல்லங்களில் இந்த முதற்கட்ட ஊசிகள் போடப்பட உள்ளன.
Pfizer-BioNTech கொரோனத் தடுப்பூசிகள் முதல் ஊசி போடப்பட்ட மூன்று வாரத்தில், அவர்களிற்கான இரண்டாவது ஊசியும் போடப்படும். ஒவ்வொருவரிற்கும் இரண்டு அலகு தடுப்பூசிகள் தேவைப்படும்.
முதற்கட்டமாக 19.500 அலகுகள் பெறப்பட்டுள்ளன. ஜனவரி ஆரம்பத்தில் இருந்து, பிரான்சில் உள்ள மற்றவர்களில் தங்கிவாழும் முதியோர் இல்லங்களான 7.000 EHPAD களில் இருப்போரிற்கான தடுப்பூசிகள் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
No comments