தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் முதியோர் இல்லங்கள்!!
நாளை ஞாயிற்றுக்கிழமை, ஒரு அடையாளமாக ஆரம்பிக்கப்படும் கொரோனத் தடுப்பு ஊசிகளின் தொடர்ச்சி, மிக வேகமாக செயற்பட ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஐரோப்பிய நாடுகள், சில நாட்களாக, முதியவர்கள், மருத்துவத் துறையினர் என தடுப்பு ஊசிகளைப் போட ஆரம்பித்துள்ளனர்.

பிரான்சிலும், அடுத்த வாரத்தில் இருந்து, லியோன், லில், தூர் (Tours) ஆகிய பெரு நகரங்களில் உள்ள 23 முதியோர் இல்லங்களில் உள்ளவர்களிற்குக் கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்படும் எனச் சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெரோன் ஊடகங்களிற்குத் தெரிவித்துள்ளார்.
மிக விரைவாகப் பிரான்சின் 7.000 இற்கும் அதிகமான முதியோர் இல்லங்கள் இலக்கு வைக்கப்பட்டு, தடுப்பு ஊசிகள் போடப்பட்டு சாவு வீதங்கள் வெகுவாகக் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments