Header Ads

நத்தார் கொண்டாடியதற்காக இளைஞன் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் - களமிறங்கிய உள்துறை அமைச்சர்!!

 


நத்தார் கொண்டாடியவன் உண்மையான இஸ்லாமியனாக இருக்க முடியாது, என்று ஒரு இளைஞனை மிகவும் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

இந்தச் சம்பவம் Belfort நகரில் நடந்துள்ளது.

காவற்துறை அதிகாரியின் மகனான இந்த முஸ்லிம் இளைஞன் தன் நண்பர்களுடன் இணைந்து நத்தார்க் கொண்டாட்டம்று, மற்றும் நத்தார் உணவுப் படங்களைத் தன் Snapchat மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில், அவரிற்கு, அவரிற்குத் தெரிந்த இஸ்லாமிய நபர்களிடம் இருந்து உடனடியாகக் கொலை மிரட்டல் வந்துள்ளது.

20 வயதுடைய இந்த இளைஞன், இஸ்லாமிய மதத்திற்குத் துரோகம் செய்துவிட்டான் எனக் கூறி, இந்த இளைஞனை இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டம் மிகக் கடுமையாகத் தாக்கிக் குற்றுயிராக்கி உள்ளனர்.

இது மிகவும் கடுமையான அடிப்படை மதவாதம் என்றும், பிரிவினைவாதம் என்றும், இவர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தார்மனன், தெரிவித்துள்ளார். இப்படியான செயல்களிற்குப் பிரான்ஸ் மண்ணில் இடமில்லை எனவும் எள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட  இளைஞனின் தாயார் காவற்துறை அதிகாரியாக இருப்பதால் இதற்கான நடவடிக்கை மிகத் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

No comments

Powered by Blogger.