சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய சட்டங்கள்!
சுட்சர்லாந்தில் புதிய போக்குவரத்து சட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனவரி 1 ஆம் திகதி முதல் இந்த போக்குவரத்து புதியசட்டம் அமுலாக்கப்படும்.
சுவிட்சர்லாந்தில் விபத்துக்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுமாயின் அவசர உதவி வாகனங்கள் கடந்து செல்ல ஓட்டுநர்கள் இடமளிக்க வேண்டும்.
இரண்டு பாதைகள் ஒன்றாக ஒன்றிணையும் போது, முடிவடையும் பாதையிலிருந்து இணையும் வானகங்களில் குறைந்தது ஒரு காருக்காவது ஓட்டுநர்கள் வழிவிட வேண்டும்.
டிரெய்லரை இழுத்த செல்லும் வாகனங்களுக்கு வேக வரம்புகள் 80 கி.மீ வேகத்தில் இருந்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மின்சார பைக்குகள் பார்க்கிங் இடங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்
பாதுகாப்பானதாக இருந்தால் சைக்கிள் ஓட்டுபவர்கள் சிவப்பு விளக்கில் வலதுபுறம் திரும்பலாம்.
மேலும், 17 வயது சிறுவர்கள் வாகனம் ஓட்ட கற்றுக்கொள்வதற்கு சாலையில் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கப்படும்.
ஆனால் அவர்கள் 18 வயது ஆகும் வரை அவர்கள் லைசன்ஸ்க்கான தேர்வில் பங்கேற்க முடியாது.
No comments