கொரோனா பரிசோதனைகளுக்காக குவியும் மக்கள்!
கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக ஆய்வுகூடங்களில் அதிகளவான மக்கள் குவிக்கின்றனர்.
சமீப நாட்களாக இல் து பிரான்சுக்குள் உள்ள மருத்துவ நிலையங்களில், ஆய்வு கூடங்களில் இந்த அதிக மக்கள் கூட்டத்தினை காணக்கூடியதாக உள்ளது. கிருஸ்மஸ் விடுமுறையின் போது வெளி மாகாணங்களுக்கு பயணிக்க கொரோனா வைரஸ் முடிவுகள் மிக முக்கியமான ஆவணமாகும்.
இதனால் இல் து பிரான்சை விட்டு வெளியேறுவதற்கு அல்லது வேறு நாடுகளுக்குச் செல்வதற்கு தயாராகும் மக்கள், தங்கள் பரிசோதனை முடிவுகளை அறிந்துகொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக laboratorie எனும் ஆய்வுகூடம் வாரம் ஒன்றுக்கு 400,000 பரிசோதனைகளை மேற்கொள்கின்றது. இந்த எண்ணிக்கை வரும் வாரத்தில் மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments