Header Ads

அதிகச் சாவுகள் - செய்ன்-சன்-துனி முதலிடம்!!

 


பிராந்திய சுகாதார அவதானிப்பு மையமான ORS (Observatoire régional de santé) தங்களது சாவு அறிக்கைகளை இன்று வெளியிட்டுள்ளது.


இல்-து-பிரான்சின் பிராந்திய சுகாதார அவதானிப்பு மையம், அதிகக் கொரோனாச் சாவுகளும், ஏனைய சாவுகளும் (surmortalité) 93ம்  மாவட்டமான செய்ன்-சன்-துனியில் (Seine-Saint-Denis) ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் முதலாவது தொற்றலையிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட செய்ன்-சன்-துனி, இரண்டாவது தொற்றலையிலும் பெரிதும் பாதிப்டைந்துள்ளது.

1ம் திகதி செப்டெம்பர் மாதத்தில் இருந்து, 15ம் திகதி நவம்பர் மாதம் வரையிலான் கணக்கெடுப்பில், செய்ன்-சன்-துனியிலேயே அதிகச் சாவுகள் பதிவாகி உள்ளன. இங்குள் நான்கு மரு;தவமனைகளின் கணக்கின் படி இந்த அறிக்கை தாயரிக்கப்பட்டுள்ளது.

செய்ன்-சன்-துனியில் சிறிய விடுகளிற்குள் நான்கு ஐந்து பேரிற்கு மேல் நெருங்கி வாழ்வதால் கொரோனத் தொற்று அதிகரிப்பதால் சாவு வீதம் அதிகரித்துள்ளதாகவும் கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.