Header Ads

🔴வருட இறுதிக்குப் பின்னர் மீண்டும் உள்ளிருப்பா? ஆலோசனையில் அரசாங்கம்!! - முழுமையான பார்வை!



 பிரித்தானியாவில் இருந்தது பரவும் புதிய அதிதீவிர வைரசின் தொற்று, நாளாந்தம் பிரான்சில் அதிகரிக்கும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பன, வருட இறுதிக்குப் பின்னரான காட்சிகள் எப்படி இருக்கும் என அரசாங்கம் தலையுடைத்து வருகின்றது.

 
மருத்துவத் துறையின் பேராசிரியர்கள் குறைந்தது மூன்று வாரம் முழு உள்ளிருப்பு முடக்கம் தேவை என்கின்றனர்.
 
அரசாங்கத்தில், பிராந்தியவாரியான உள்ளிருப்பிற்கும் சாத்தியம் என்ற பேச்சு எழுந்து வருகின்றது. அதிகத் தொற்று உள்ள பிராந்தியங்களை முடக்கி, பிராந்தியங்களிற்கு இடையிலான போக்குவரத்துக்களைத் துண்டிப்பதன் மூலம், தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இது ஆராயப்படுகின்றது.
மூன்றாவதாக, ஊரடங்கை நீட்டித்து, மேலும் அதிகநேரம் ஊரடங்கை அறிவித்து, கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
 
அத்துடன் உணவகங்கள், மதுச்சாலைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தியைரங்குகள் போன்றவற்றைத் திறப்பதும், மேலும் தள்ளிப் போகலாம் எனவும், உணவகங்கள் மற்றும் மதுச்சாலைகளை மூடியமை 85 சதவீதத் தொற்றறைத் தடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எமானுவல் மக்ரோனும் பல அமைச்சர்களும் விடுமுறையில் சென்றிருக்கும் நிலையில் துரித முடிவுகள் எடுக்கப்படுமா என, ஏற்கனவே மிகவும் களைத்துள்ள பிரான்சின் மருத்துவத்துறை எதிர்பார்த்து நிற்கின்றது.

No comments

Powered by Blogger.