அமெரிக்கா மாடர்னா கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை
கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம் ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
அதேபோல் அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன.
இதில் முதலில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்ட பின்னர் 2-வதாக மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மாடர்னா நிறுவன தடுப்பூசியை செலுத்தி கொண்ட மருத்துவருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
பாஸ்டன் மெடிக்கல் சென்டரில் பணியாற்றும் மருத்துவர் ஹாசைன் சதர்சா தேவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட உடனே அவருக்கு கடுமையான பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.
மயக்கம் மற்றும் இதயம் வேகமாக இயங்கியதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஸ்டன் மெடிக்கல் சென்டரின் செய்தி தொடர்பாளர் டேவிட் கிப்மே தெரிவிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மருத்துவர் சதர்சாதே, அலர்ஜி ஏற்பட்டதாக உணர்ந்தார்.
உடனே அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் இருக்கிறார் என்றார்.
ஏற்கனவே பைசர் நிறுவன தடுப்பூசியாலும் சிறு பக்க விளைவு ஏற்பட்டமை என்பது குறிப்பிடத்தக்கது
No comments