Header Ads

பாக்கு சீவி கொடுத்து படிக்க வைத்த தாய்; வவுனியாவில் உயிரிழந்த மாணவனின் சோகமான குடும்ப பின்னணி!

 


வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்று மாயமான மாணவன் தியாகராசா தணியனின் குடும்பம் தொடர்பான தகவல்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது. இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமிருந்தனர்.

இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக தோணிக்கல் பகுதியை சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் தனது நண்பர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் அங்கு சென்றுள்ளார். இதன்போது நீர் வழிந்தோடும் வாய்க்கால் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை, தொடர்ந்து பொலிஸார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இரண்டு நாட்களாக தேடிவந்த நிலையில் நேற்றையதினம் (6) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தியாகராசா தணியன் அவரின் குடும்ப பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது, தணியனின் தந்தை ஒரு நோயாளி, தாய்தான் பாக்கு சீவி கொடுத்து அதில்வரும் பணத்தில்தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார், இவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார்.தணியன் கல்வியில் சிறந்து விலங்கிய மாணவன், கல்வி பொது தராதரப் பரீட்சையில் 8A, 1B பெறுபேறுகளை பெற்று உயர்தரப்பரீடசைக்கு தயாராகி வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துளான்.

முழுக்க முழுக்க இவனையே நம்பியிருந்தது தனியனின் குடும்பம், இவர் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து நல்ல வேலைக்கு போய் தங்கள் குடும்ப கஸ்ரங்களை நீக்குவான் என பெரும் எதிர்பார்ப்பிலிருந்த குடும்பத்திற்கு கண்ணீர்தான் மிட்சம்.தியாகராசா தணியனின் இறுதிக்கிரிகைகள் இன்றையதினம் (7) அவரது இல்லத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.