Header Ads

வேகமாக பரவும் புதிய கொரோனா! லண்டன் தமிழ்ப்பெண் விடுக்கும் எச்சரிக்கை



 பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபின் தீவிர பரவல் காரணமாக, கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்திருக்கிறது.

இந்நிலையில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் புதிய வகை திரிபு தொடர்பில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை மருத்துரான தமிழ்ப்பெண் ரிஸ்வியா மன்சூர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிரித்தானியாவில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா புதிய திரிபு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அனேகமாக ஒரு வாரத்திலோ அல்லது இரண்டு வாரங்களிலோ எங்களைப் போன்ற மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் புதிய திரிபு பாதிப்பு நேர்ந்து தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படலாம்.

அப்படியொரு சூழலில் நோயாளிகளை கவனிக்க மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் அச்சம் நிலவுகிறது.

ஆனால், பழைய கொரோனா வைரஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை எளிதாகப் பாதித்து வந்தது.

இந்த புதிய கொரோனா 40 வயதளவில் இருப்பவர்களை கூட எளிதாக தாக்குகிறது.

வைரஸ் பாதிப்பு தீவிரமானால் அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்.

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் வலிமை எப்படி இருக்கிறது என்பது மூன்று, நான்கு வாரங்களுக்கு பிறகே தெரிய வரும்.

சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் அத்தகைய எச்சரிக்கை உணர்வுடன் பொதுமக்களும் இருந்தால் மட்டுமே இந்த கொடிய வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.