Header Ads

பனிப்புயலால் பாதிக்கப்படும் கனேடிய மாகாணங்கள்… திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

 



கனேடிய மாகாணங்கள் பனிப்புயலால் பாதிக்கப்படும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கைகள் முதல் கியூபெக்கில் கடுமையான குளிர் மற்றும் நோவா க்ஷ்கோட்டியாவில் கடுமையான பனிப்புயல் காணப்படுகின்றது

நோவா க்ஷ்கோட்டியாவின் சில பகுதிகள் டிசம்பர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலைக்குள் 25 சென்டிமீட்டர் பனிப்பொழிவைப் பெறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மாகாணத்தின் சில பகுதிகள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு பகுதியும் பனிப்பொழிவு எச்சரிக்கையின் கீழ் உள்ளது.

இருப்பினும் அதிகபட்சம் 15 சென்டிமீட்டர் மட்டுமே பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியூபெக்கின் தெற்குப் பகுதிகள் -40 சி வரை குறைந்த குளிர்ச்சியை எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நுனாவுட் மற்றும் வடமேற்கு பிரதேசங்களும் கடுமையான குளிர் காணப்படுகின்றது.

இந்த கடுமையான குளிர்க்காலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.

அதனால் பெருமளவில் மக்கள் தங்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

No comments

Powered by Blogger.