Header Ads

800 வருடங்களின் பின்னர் வானில் ஏற்படும் மாற்றம்! இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்


 

இலங்கையர்கள் இன்று இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
வானியல் நிபுணர் அனுர சி பெரேரா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
 
வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. 
 
இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.
 
800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. 
 
இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.