பிரான்சில் 8 வயது சிறுமியை கொடூரமாகக் கொன்ற 38 வயது பெண்!
பிரான்சின் Limay (Yvelines) நகரில் வசிக்கும் 8 வயது சிறுமி ஒருவர், தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் 38 வயது பெண்ணிற்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.
உடனே அப்பெண் திடீரென்று கத்தியால் சிறுமியை கண்மூடித்தனமாக குத்தியுள்ளார்.
சிறுமி மட்டுமின்றி, உடன் இருந்த 4 வயது சிறுவனையும் அப்பெண் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகியுள்ளார்.
சம்பவம் குறித்து விரைந்து வந்த பொலிசார், சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிரிழந்த சிறுமியின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை உடனடியாக கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments