Header Ads

கொழும்பில் முதியோர் இல்லமொன்றில் 42 பேருக்கு கொரோனா தொற்று!

 


கொழும்பு முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லமொன்றில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

98 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த முதியோர் இல்லத்தில் அண்மையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து முதியோர் இல்லங்களில் உள்ள மற்றய அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.