இலங்கையில் 45 அடி உயரமான மரத்தில் ஏறிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!
பதுளை தெல்பெத்த தோட்டத்தில் சுமார் 45 அடி வரை உயரம் கொண்ட பலா மரமொன்றில் ஏறிய இளைஞன் மயக்கமடைந்துள்ளார்.
மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞன் கடுமையான முயற்சியின் பின்னர் கீழே கொண்டு வரப்பட்டுள்ளார்.
27 வயதுடைய குறித்த இளைஞன் மரத்தில் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த போது மயக்கமடைந்துள்ளார்.
அவர் மயக்கமடைந்த நிலையில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள் சிலர் கயிற்றின் உதவியுடன் கீழ் இறக்கி நோயாளர் காவு வண்டியில் பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments