பிரித்தானியாவில் 4 அடுக்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட பகுதிகள்
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மற்றும் தீவிரமாக பரவி வருகின்றது.
புதிய வகை நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக பாக்ஸிங் தினம் (டிசம்பர் 26) முதல் 4 அடுக்கு கட்டுப்பாடுகள் இங்கிலாந்தின் சில பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
பிரித்தானியாவல் புதிதாக 4 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ள பகுதிகளின் விவரத்தை சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் 20 ஆம் திகதி லண்டன் மற்றும் தென்கிழக்கில் கடுமையான 4 அடுக்கு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அத்தியாவசியமற்ற சில்லறை கடை, சிகையலங்கார கடை மற்றும் உட்புற ஜிம்கள் மூடப்பட்டன.
4 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பிரித்தானியர்களால் வெளிப்புறம், பொது இடத்தில் மற்றொரு வீட்டைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை சந்திக்க அனுமதியில்லை.
இந்நிலையில், பாக்ஸிங் தினம்(டிசம்பர் 26), அதாவது சனிக்கிழமை முதல் New Forest தவிர்த்து Hampshire, Sussex, Oxfordshire, Norfolk மற்றும் Cambridgeshire, Suffolk, the remainder of Essex, Waverley பகுதிகளில் 4 அடுக்கு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் உறுதிப்படுத்தியுள்ளார்.
No comments