கொரோனா வைரசில் இருந்து முற்றாக குணமடைந்த மக்ரோன்!!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கொரோனா வைரசில் இருந்து முற்றாக குணமடைந்துள்ளதாக அறிய முடிகிறது.
இன்று வியாழக்கிழமை நிலவரப்படி, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு கொரோனா வைரசுக்குரிய எந்த அறிகுறிகளும் இல்லை எனவும், அவர் பூரண நலமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி மக்ரோன் பிரெஞ்சு மக்களுக்கு விடுமுறை தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்தோடு சுகாதார கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
No comments