அமெரிக்காவில் 3 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை
உலகளாவிய கொரோனா தொற்றுநோயால் அமெரிக்காவில் இதுவரை 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
‘பைசர்’ தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US FDA) அனுமதி அளித்துள்ளது.
ஒரே நாளில் சுமார் 2,200 உயிரிழப்புக்களை பதிவுசெய்த அமெரிக்கா, டிசம்பர் 9 ஆம் திகதி முதல் முறையாக ஒரே நாளில் 3,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் 300,267 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் ஒரு கோடியே 65 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க வெகுஜன தடுப்பூசி திட்டத்தின் முதல் ஊசி நேற்று திங்கட்கிழமை காலை நியூயோர்க்கின் குயின்ஸில் உள்ள மருத்துவ நிலையத்தில் வழங்கப்பட்டது.
அமெரிக்காவில் மோசமான குளிர்காலம் என்பதால் தொற்றின தீவிரத்தன்மை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments