இலக்கு வைக்கப்பட்ட 20 மாவட்டங்கள் - மேலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் - சுகாதார அமைச்சு அச்சம்!!
பிரான்சின் அதிகக் கொரோனாத் தொற்றுள்ள மாவட்ங்களாக 20 மாவடடங்கள் சுகாதார அமைச்சினால் குறிவைக்கப்பட்டுள்ளன.
பின் வரும் மாவட்டங்களான Allier (03), Hautes-Alpes (05), Alpes-Maritimes (06), Ardèche (07), Ardennes (08), Aube (10), Doubs (25), Jura (39), Marne (51), Haute-Marne (52), Meurthe-et-Moselle (54), Meuse (55), Moselle (57) Nièvre (58), Haut-Rhin (68), Haute-Saône (70) Saône-et-Loire (71), Vosges (88), Yonne (89) Territoire de Belfort (90) ஆகியவையே முதற்கட்டமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக இந்த மாவட்டங்களிற்கு எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி முதல், 18h00 மணியிலிருந்து காலை 6h00 மணிவரை 12 மணிநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக, நாளொன்றிற்கு 10.000 முதல் 20.000 தொற்றுக்கள் பதிவாகும் நிலையில் சுகாதார அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
ஆனால் எதிர்வரும் ஜனவரி 1ம் திகதியின் கொரோனாத் தொற்றலையின் அடிப்படையில், இங்கு மேலும் கட்டுப்பாடுகளும், மேலும் பல மாவட்டங்களும் அறிவிக்கப்படலாம் எனவும் சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.
நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்கள், கொரோனத் தொற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், சுகாதார அமைச்சகம் அச்சம் தெரிவித்துள்ளது.
No comments