200 நகரபிதாக்கள் தடுப்பூசி போடக் கோரிக்கை - முன்னுதாரணமாக ஆசை!!
பிரான்சின் 200 நகரங்களின் நகபிதாக்கள், தாங்கள் தங்களிற்குக் கொரோனாத் தடுப்பூசிகள் போடப்ப வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.
«அரசாங்கம் வரும் கோடை காலத்திற்குள், 15 மில்லியன் பேரிற்குக் கொரோனாத் தடுப்பூசிகளைப் போடத் தயார் என அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான எந்த நம்பிக்கையையும் அரசாங்கம் ஏற்படுத்தவில்லை» என 200 நகரபிதாக்கள் அடங்கிய குழு தெரிவித்துள்ளது.
«இதனால், நாங்கள் நகரபிதாக்கள் 200 பேரும் முன்னுதாரணமாக மக்களின் முன்னால் தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புகின்றோம். இதனால் அதற்கான வசதிகளைச் செய்து தரும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்» என இந்தக் குழு கேட்டுக் கெண்டுள்ளது.
இதில் பல நகரபிதாக்கள் எதிர்க்கட்டசியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments