2 ஆண்டுகளாக பாறைக்கு அடியில் வசிக்கும் விசித்திர மனிதன்
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 35 வயதான ரேன்டி (Randy) 2 ஆண்டுகளாக பாறைக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளியில் வசித்து வந்துள்ளார்.
பெற்றோர் உயிரிழந்த பிறகு திடீரென காணாமல் போன அவரை அப்பகுதியினர் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், பெற்றோரை இறந்த விரக்தியிலும், பிறருடன் பேச விரும்பாலும் அவர் அங்குள்ள பாறைக்கு அடியில் பதுங்கி வாழ்ந்துள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த மக்கள் கண்டுபிடித்து அவருக்கு 2 ஆண்டுகளாக உணவளித்து உதவியுள்ளனர்.
பொது இடத்தில் வாழ வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்தும், அதை ஏற்க மறுத்து ரேன்டி அங்கேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.
No comments