Header Ads

ஜேர்மனியில் முதல் கொரோனா தடுப்பூசியை பெற்ற 101 வயது பெண்மணி!

 



ஜேர்மனி தனது கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே, சனிக்கிழமை பயோஎன்டெக்-ஃபைசர் தடுப்பூசிகள் சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் தொடங்கப்பட்டன.

சாக்சோனி-அன்ஹால்ட்டில் உள்ள ஒரு நர்சிங் ஹோமில் 101 வயதான ஒரு பெண், கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட்ட ஜேர்மனியின் முதல் நபர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

ஹால்பர்ஸ்டாட்டில், 101 வயதான எடித் குய்சல்லா, நகரத்தின் க்ரூகர் மையத்தில் மூத்த குடிமக்களுக்கான தடுப்பூசி பெறும் முதல் குடியிருப்பாளர் ஆவார்.

அந்த மையத்தில் 40 குடியிருப்பாளர்கள் மற்றும் 10 ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது.

சனிக்கிழமையன்று, பல்லாயிரக்கணக்கான தடுப்பூசி மருந்துகள் பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

நர்சிங் ஹோம்களில் வசிப்பவர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் முதன்முதலில் தடுப்பூசிப் பெறுவார்கள் என்று ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.