Disneyland திறப்பதில் தாமதம்! - திகதி அறிவிப்பு!!
இரண்டாம் கட்ட உள்ளிருப்புக்காக மூடப்பட்டுள்ள Disneyland பரிஸ் கேளிக்கை மையம், மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதியே மீண்டும் Disneyland Paris திறக்கப்டும் என அதன் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ஆம் திகதியுடன் நாட்டில் உள்ள அனைத்து உணவகங்கள், மதுச்சாலைகள் அனைத்தும் திறக்கப்படும் என நேற்று ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தார்.
ஆனால் அன்றைய திகதியில் Disneyland Paris திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறைகள் போன்ற கொண்டாட்டங்களுக்கு இம்முறை டிஸ்னிலேண்ட் திறக்கப்படமாட்டாது.
No comments