Header Ads

ஜனாதிபதியின் மூன்று கட்ட தளர்வுகளின் சுருக்கம் மற்றும் 20 km சுற்றுவட்டாரத்தை அறிவிக்கும் செயலி!

 




எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதிசனிக்கிழமை முதல் பயணம் மேற்கொள்வதற்கான அதிகபட்ச தூரம் 20km ஆகவும்அதிகபட்ச பயண காலம் 3 மணிநேரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுமேலும் சிறு வணிகங்கள்திறக்கப்படுவதற்கு அனுமதியும்வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு அதிகபட்சமாக 30 பேர் வரைஅனுமதிக்கப்படுவார்கள்.

டிசம்பர் 15

 டிசம்பர் 15 ஆம் திகதி இரண்டாம் கட்ட உள்ளிருப்பு சட்டம் தளர்த்தப்படுகின்றது மற்றும் அதன் பின்னர் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணிவரை இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் ,  திரையரங்கம்விளையாட்டு அரங்கம்அருங்காட்சியகம் போன்றவை திறக்கப்படும்

ஜனவரி 20

 ஜனவரி 20 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்இரு வாரத்தின் பின்னர்பல்கலைக்கழகம் திறக்கப்படும்உணவகம்மதுபான விடுதிகளும் திறக்கப்படும்.

ஒரு கிலோமீற்றர் அதிகபட்ச தூரம் எனும் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது 20km வரை பயணிக்கலாம் எனஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பைத் தொடர்ந்து நீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து அருகேஎங்கெல்லாம் நீங்கள் செல்லாம்?? உங்களுக்கு உதவுகின்றது ஒரு புதிய தொலைபேசி செயலி.

பிரான்சில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும்நீங்கள் இருக்கும் 20km சுற்று வட்டாரத்தை இது அறிவிக்கின்றது.

இந்த எல்லைக்குள்ளாக மாத்திரமே நீங்கள் பயணிக்க முடியும்.

இது அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இணைய இணைப்பு…

இங்கே அழுத்துக உங்கள் முகவரியை நிரப்பவும், distance என்பதை அழுத்தி KM பெட்டியில் “20” எண்ணைக் குறிப்பிடுவதன் மூலம் தூர எல்லையை தேர்ந்தெடுக்கவும்நீங்கள் முடித்துவிட்டீர்கள்உங்கள் வரம்புகள் எங்கு நிற்கின்றன என்பதைக் காண வரைபடத்தில் பெரிதாக்க முடியும்.

No comments

Powered by Blogger.