Header Ads

சவூதிக்கு வேலைக்கு செல்ல அனுமதி

 J.f.காமிலா பேகம்




சவுதி அரேபியாவிற்கு தொழில்வாய்ப்புக்கள் நிமிர்த்தம், பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக கடந்த 10 மாத காலமாக சவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

சவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், வெளிநாட்டு தொழில் வழங்குநர்கள் இடையில் காணப்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் தலையீட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின், முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

இதன்படி, இலங்கையிலுள்ள ஆண் பணியாளர்கள் 60 பேர், சவுதி அரேபியா நோக்கி இன்று புறப்பட்டு சென்றுள்ளதாக பணியகத்தின் அதிகாரியொருவர் குறிப்பிடுகின்றார்.


No comments

Powered by Blogger.