லண்டனில்களவாக நடந்த சாமத்திய வீடு: 25 தமிழருக்கு கொரோனா தொற்று உறுதியானது!!
சிலர் என்ன தான் சொன்னாலும் திருந்தப் போவது இல்லை, என்றாகிவிட்டது. தமிழ் குடும்பம் ஒன்று, லாக் டவுனையும் மீறி மகளுக்கு வீட்டில் சாமத்திய வீடு(புப் புனித நீராட்டு விழா) செய்துள்ளார்கள். தூரத்தில் காரை நிறுத்தி விட்டு, அவரது உறவினர்கள் வீட்டுக்கு சிறுது சிறிதாக சென்றுள்ளார்கள்.
ஒரு கட்டத்தில் 35 பேர் வரை வீட்டில் இருந்துள்ளார்கள். மிகவும் ரகசியமாக இது நடந்துள்ளது. ஏன் எனில் பக்கத்து வீட்டு வெள்ளைக் காரன் பார்த்தால் பொலிசுக்கு சொல்லி விடுவான் அல்லவா. அந்த பயம் வேறு.ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில் வந்துள்ளது. வங்கியில் வேலை செய்யும் பெண் ஒருவர், தனது சேலை மற்றும் நகைகளை அப்படியே, வேலை செய்யும் வங்கிக்கு கொண்டு சென்று. மதியம் வேலை முடித்த பின்னர் அங்கே உடைகளை மாற்றி. காரில் சாமத்திய வீட்டுக்கு சென்றுள்ளார். அவருக்கு கொரோனா இருந்த விடையம் அவருக்கே தெரியாத நிலை.
இதனால் சுமார் 25 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல தமிழ் குடும்பங்கள் இதனால் பாதிப்படைந்துள்ளார்கள். ஒரு குடும்பத்தில் அப்படியே, அப்பா அம்மா மகள் மற்றும் மகன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். இனியாவது களவாக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது. களவாக ரெஜிஸ்ரேஷன் செய்து மோதிரம் மாத்துவது, களவாக சாமத்திய வீடு செய்வதை தமிழர்கள் நிறுத்துவது நல்லது.
நீங்கள் சட்ட திட்டங்களை மட்டும் மீறவில்லை. உங்கள் உறவுகளையும் பெரும் ஆபத்தில் போடுகிறீர்கள் என்பதனை மறக்க வேண்டாம். வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்கள் நிலையை கொஞ்சமாவது எண்ணிப் பாருங்கள்: குடும்பங்களின் நலன் கருதி பெயர்களை நாம் வெளியிடவில்லை. இது பிரித்தானியாவில் லண்டனில் நடந்த சம்பவம்.
No comments