Header Ads

ஆறாவது தடவையாக நாட்டுமக்களுக்கு அதிபர் என்ன சொன்னார் ?

 



கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தின் தனது ஆறாவது உரையினை இன்று செவ்வாய்கிழமை வழங்கிய அதிபர் எமானுவல் மக்ரோன், தற்பொதுது நடைமுறையில் உள்ள இரண்டாம் பொதுமுடக்கத்தின் விலக்குகள், புதிய நடைமுறைகள் தொடர்பில் நாட்டுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

வைரிசின் இரண்டாம் தொற்றின் உச்சத்தை கடப்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்த அதிபர், மூன்றாம் அலையொன்று ஏற்படாது இருப்பதற்குரிய கூட்டுப்பொறுப்பு அனைவருக்கும் உண்டென தெரிவித்தார்.

தற்போது வைரசின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில், கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளில் அலட்ச்சிய போக்கினை காட்டக்கூடாது என அறிவுறுத்திய அதிபர், நாளொன்றுக்கு 5000 பேர் வரையிலான வைரஸ் தொற்றும், 2300 குறைவான தீவிர சிகிச்சை நிலையினை காணுவதுமே அரசாங்கத்தின் இலக்கென தெரிவித்தார்.

அதிபரின் இன்றைய உரையின் கூறப்பட்டுள்ள பொதுமுடக்க தளர்வுகள், புதிய நடைமுறைகள் :

  • இரவு 21 மணி முதல் காலை 7 மணிவரை ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வருகின்றது.
  • தற்போது நடைமுறையில் உள்ள வெளிச்செல்வதற்கான படிவ நடைமுறை தொடர்ந்தும் டிசெம்பர் நடுப்பகுதி வரை நடைமுறையில் இருக்கும்.
  • வரும் சனிக்கிழமை முதல் அனைத்து வர்த்தக நிலையங்களும் இரவு 21 மணி வரையில் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.
  • உணவகங்கள், அருந்தகங்கள், விளையாட்டு மையங்கள் ஆகிய அடுத்தாண்டு ஜனவரி 20ம் தேதிக்கு பின்னராகவே திறப்பதற்கான நிலை காணப்படுகின்றது.
  • திரையரங்குகள், நாடக அரங்குகள், அருங்காட்சியகங்கள் ஆகிய டிசெம்பர் 15ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
  • வீடுகளில் இருந்து தமது வேலைத்தள பணியினை மேற்கொள்பவர்கள் தொடர்ந்தும் அhனை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுகின்றது.
  • 20 கிலோ மீற்றர் சுற்றுவட்டகைக்குள் 3 மணிநேரம் சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றது.
  • நத்தார், புத்தாண்டு கொண்டாடங்களை கவனத்தில் கொண்டு குடும்பங்களுக்கு இடையிலான ஒன்றுகூடல்களுக்கான அனுமதி டிசெம்பர் 24 முதல் 31 நள்ளிரவு வரை வழங்கப்படுகின்றது. இக்காலத்தில் ஊரங்கு சட்டம் நீக்கம் செய்யப்படுகின்றது.
  • வழிபாட்டு தளங்கள், திருமண நிகழ்வுகள், மரண சடங்குகளுக்கு 30 பேர் வரையில் பங்கெடுப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது.
  • தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப கொண்டாட்களுக்கான தடை நடைமுறையில் இருக்கும்.

No comments

Powered by Blogger.