மாவீரர்களை நினைவேந்தி உணர்வெழுச்சியுடன் பிரான்ஸ் லாச்சப்பல் !
தேசத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்தி பிரான்ஸ் லாச்சப்பல் தமிழர் வர்த்தக பகுதி உணர்வெழுச்சி கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் அவசரகால சுகாதார நிலைமைகள் காரணமாக பொதுமண்டபத்தில் மாவீரர்களை நினைவேந்த முடியாத நிலைமை காணப்பட்டாலும், கொரோனாவைவிட கொடிய வைரசான சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக போராடி, தமிழர் தேசத்தை காக்க உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்த தமிழர்கள் தவறவில்லை.
சமீபத்திய காலமாக பிரான்ஸ் எதிர்கொண்டு வரும் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் காரணமாக, பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களை பிரான்ஸ் இறுக்கமாக்கி வருகின்றது. பிரான்சின் இந்த நடவடிக்கையினை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, சிறிலங்கா தூதரகமும், சிங்கள ஒட்டுண்ணிகளும் தமிழர் தேசிய நினைவெழுச்சிக்கு பயங்கரவாத மூலாம் பூச முனைவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் லாச்சப்பல் வர்த்தக பகுதியில் ஒட்டப்படிருந்த மாவீரர் ஒட்டிகள், காவல்துறையினரால் அகற்றப்பட்டதாக முன்னராக செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை லாச்சப்பல் தமிழர் வர்த்தக நிலையங்கள் மாவீரர்நாளினை நினைவேந்தும் சுவரொட்டிகள் உணர்வெழுச்சியுடன் காணப்படுகின்றது.
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்தும் நடவடிக்கைகளுக்கு லாச்சப்பல் வர்த்தக சங்கம், தனது முழுமையான ஆதரவினை எப்போதும் வழங்கும் என பிரான்ஸ்தமிழ் இணையத்துக்கு வர்த்தக சங்கம் பிரான்சின் சட்டங்களுக்கு உட்பட்டு முன்னெடுக்கப்படும் போது சிக்கல் எழ வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.
பிரான்சின் தற்போதைய சூழலுக்கு அமைவாக பிரசுர உரிமம் பெற்று இப்பிரசுரம் வெளியிடப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, அனைத்து வர்த்த நிலையங்கள், பொதுஇடங்களில் வணக்க தளங்களில் மாவீரர்நாள் 2020 அறிவிப்பு துண்டுப்பிரசுரமாக பயன்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம் அறிவித்துள்ளது.
No comments