பருத்தித்துறை பிரதான பயணப்பாதையில் வரவேற்பு நுழைவாயில்
வடமராட்சி வல்லை வெளி முனியப்பர் கோவிலுக்கு அருகாமையில், யாழ் -பருத்தித்துறை பிரதான பயணப்பாதையில் வரவேற்பு நுழைவாயில் வளைவு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் அமைக்கப்படவுள்ளது.
வரவேற்ப்பு வளைவுக்கான அடிக்கல்லை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் இன்று 15/03/2018 நாட்டிவைத்தார்
மேலும் இந்த நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலாளர் ,பிரதேச செயலக உயர் அதிகாரிகள்,கிராம சேவையாளர்கள் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பெரியோர்கள் வடமராட்சி பிரதேச மக்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்களின் பேராதரவு கிடைக்கப்பெற்றிருந்தது எனவும், எனது எண்ணமாகவும் மக்களின் விருப்பமாகவும் இருந்ததன் விளைவாக,அதன்வீ பிரதிபலிப்பாக வீரம் விளைந்த வல்வை மண் சார்பாகவும் பிரதான நுழைவு வளைவு அமையப்பெறவுள்ளது. என கருத்து வெளியிட்டுள்ளார்.
No comments