Header Ads

கல்முனை விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு


கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் கே. லவநாதன் தலைமையில் இன்று (16) வெள்ளிக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தார். 

மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் சுலக்சன், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

இதன்போது கல்முனை பிரதேச செயலகத்தில் பதிவு செய்த விளையாட்டுக் கழகங்கள் அனைத்திற்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன

No comments

Powered by Blogger.