வெள்ள வாய்க்கால் வடிகான் அமைப்பதற்கான ஆரம்ப வைபவம்
கரவெட்டி பிரதேச செயலகப்பகுதிக்குற்பட்ட j/ 371 கிராம அலுவலக பிரிவில் அமைந்துள்ள ஆட்டுப்பட்டி கிராமப் பகுதியில், வெள்ள வாய்க்கால் வடிகான் அமைப்பதற்கான ஆரம்ப வைபவம் இன்று காலை நடைபெற்றிருந்தது.
இது வரை காலமும் பல்வேறு அசொவ்கரியங்களுக்கு முகம் கொடுத்து வந்திருந்த ஆட்டுப்பட்டி கிராம மக்கள் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, திட்டத்திற்கான சம்பிரதாயபூர்வ ஆரம்ப நிர்மான நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்
கௌரவ நாடாளமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமனாதனது பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலாளர்,j/371 கிராம சேவையாளர் ,சமூக அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள்,கிராம மக்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments