யாழ்ப்பாணப் பொலிசாரால் பாதிக்கப்பட்ட இளைஞனின் வாக்குமூலம்!!
யாழ்ப்பாண காவற்துறையினரின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞன் தனது முகநூலில் பதிந்துள்ள வாக்கு மூலம்.
கோவில் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகின்றேன்
.23.01.2018 அன்று இரவு 11.15 வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு வரும்வேளை கச்சேரியடியில் உள்ள கடைக்குச் சென்று ஆஸ்பத்திரி வீதி வழியாக எனது வீடடைச் சென்றடைந்தேன், அப்போது எனது வீட்டுக்கு சற்றுத் தொலைவில் மறைவாக யாழ் போக்குவரத்து காவற்துறையினர் நின்றிருந்தனர் அவர்களில் சுமித் என்ற காவற்துறை அதிகாரி வீட்டு வாசலில் நின்ற எனதருகில் வந்து எனது மோட்டார் சைக்கிள் காப்புறுதி பத்திரம் மற்றும் இறை வரி பத்திரம், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களைக் காண்பிக்குமாறு கோரினார்.
No comments