நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாதச் சம்பவங்களை உடனடியாகக் கட்டுப்படுத்தி, முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்தி சுமூக நிலைமையத் தோற்றுவிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸின்பிரதித்தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,அண்மைக் காலமாக நாட்டின் பல பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகள் கூட கேள்விகளைத் தோற்றுவித்துள்ளன.
No comments