Header Ads

இந்திய பிரதமருக்கு விரைவில் கடிதம் அனுப்ப தயார்: சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

 


இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமருக்கு நிச்சயமாக கடிதம் அனுப்பப்படும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி கடையடைப்பு அனுஸ்டிப்பது தொடர்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் தமிழ் கட்சிகள் இணைந்து கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தன. 

இதன் பின்  ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், சிங்கள பௌத்த மக்கள் வாழாத தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் தொடர்ச்சியாக காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு புத்தர் கோயில்கள் நிறுவுகின்ற வேலைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்பதை கண்டித்தும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடுவில் நூற்றுக்கணக்கான வருடங்களாக கால்நடைகளுக்காக இருக்கக்கூடிய அந்த மேய்ச்சல் தரையை பலாக்காரமாக முன்னர் இருந்த ஆளுநர் அங்கு இருக்கின்றது.

ஒரு சில சிங்கள மக்களுக்கு கொடுத்து இப்பொழுது மயிலத்தமடுவில் மட்டக்களப்பில் இருக்கின்ற கால்நடைகளை கொண்டு சென்று பராமரிக்க முடியாத, மேச்சல் தரைக்கு விட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.

அதே சமயம் மட்டக்களப்பில் வேளாண்மை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் அந்த மேய்ச்சல் தரை என்பது உடனடியாக விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பில் வேளாண்மை ஆரம்பிக்கப்பட வேண்டுமாக இருந்தால் மேச்சல் தரை என்பது முழுமையாக விடுவிக்கப்பட்டு அந்தக் கால்நடைகள் அங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்கின்ற விடயங்களை வலியுறுத்தியும், இவற்றை இலங்கையில் இருக்கக்கூடிய ராஜதந்திர மட்டங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இலங்கையில் இவ்வாறான பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை உலக நாடுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கைக்கு உதவி செய்கின்ற நிறுவனங்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த அடிப்படையில் இந்த நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு எதிராக ராணுவம், பொலிஸ், பௌத்த பிக்குகள் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றார்கள் என்ற விடயத்தை சுட்டிக்காட்டி நாங்கள் வருகின்ற 20ம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய நிலையில் கடையடைப்பை நடத்துவதற்கு முடிவுகள் எடுத்திருக்கின்றோம்.

அதற்கான துண்டு பிரசுரங்கள் அதற்கான செயற்பாட்டு வேலைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் இன்று முடிவுகள் எடுத்து இருக்கின்றோம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ச்சியாக இது பற்றி பேச இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.