Header Ads

திருகோணமலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு



திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் இன்றையதினம் (23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈச்சிலம்பற்று - முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ் (வயது 35) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (22) இரவு குறித்த நபர் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து மதுபானம் அருந்தினர் எனவும், மற்றைய இருவரும் வீடுகளுக்குச் சென்றனர் எனவும், குறித்த நபர் மது அருந்திய இடத்தில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இதேவே
ளை உயிரிழந்தவரின் வலது காதில் இரத்தம் கசிந்து காணப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் சென்று சடலத்தைப் பார்வையிட்டதையடுத்து சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் பொலிஸாரை நீதிவான் பணித்தார்.

இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஈச்சிலம்பற்று பொலிஸார், உயிரிழந்த நபருடன் மது அருந்திய இருவரையும் விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.