Header Ads

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் அவசர தேவைகள் குறித்து விசேட கவனம்

 


இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கிணங்க, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கை மக்களின் தேவைகள் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை வழங்குவதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இஸ்ரேலில் பணிபுரியும் அல்லது வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இலங்கையர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பின் அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின், இலங்கை அதிகாரிகளுக்கு நேரடியாக அறிவிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 0094 117966396 எனும் தொலைபேசி இலக்கத்திற்கோ, 0094 767463391 எனும் 'வட்ஸ அப்' இலக்கத்திற்கோ அல்லது opscenga@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட குடிவரவு குடியகல்வு நடைமுறைகள் மூலமாகவோ, வேறு எந்த முறையிலோ இஸ்ரேல் சென்றுள்ள எந்தவொரு இலங்கையரும் இந்த சேவையைப் பெற முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 




No comments

Powered by Blogger.