Header Ads

மன்னாரிலிருந்து தொழிற்பயிற்சி உபகரணங்களை அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல முயற்சி!

 


மடு. கல்வி வலயத்தில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பெறுமதி வாய்ந்த தொழிற் பயிற்சி உபகரணங்களை அம்பாந்தோட்டைக்கு கொண்டுசெல்ல திட்டமிட்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் முயற்சியால் நேற்று இந்த விடயம் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற் பயிற்சி அலுவலகத்திலிருந்து அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட தொழிற் பயிற்சி உபகரணங்கள் அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தமாகியுள்ளது.

இந்நிலையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் குறித்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.

மன்னார் மாவட்டத்திற்கான தொழிற்பயிற்சி நிலையத்திற்கும், இளையோர்களின் தொழிற்பயிற்சிக்கும் என பல இலட்சம் பெறுமதியான அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் குறித்த நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும் அவற்றை இங்குள்ள இளையோர்களின் தொழில் முயற்சிக்கு பயன்படுத்தாமல் அம்பாந்தோட்டைக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக நேற்றும் வாகனமும் வந்ததுள்ளது.

இதனையடுத்த அப்பகுதி இளைஞர், யுவதிகள் மூலம் சம்பவத்தை கேள்விப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு வடக்கு மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையில் குறித்த பொருட்களை அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல இருந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தொழிற்பயிற்சியை மன்னார் மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 



No comments

Powered by Blogger.